விபத்துக்குள்ளான பேருந்துகளை அகற்றும் பணியில் இராணுவம்! A -9 வீதியின் இரு பக்கமும் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு காத்திருக்கும் வாகனங்கள்..

ஆசிரியர் - Editor I
விபத்துக்குள்ளான பேருந்துகளை அகற்றும் பணியில் இராணுவம்! A -9 வீதியின் இரு பக்கமும் பல கிலோ மீற்றர் நீளத்திற்கு காத்திருக்கும் வாகனங்கள்..

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்ட நிலையில் ஏ -9 வீதி ஊடான போக்குவரத்து சில மணி நேரம் தாமதமாகியுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 12.15 அளவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த பேருந்தை தொடர்ந்து வந்த மற்றுமொரு சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்துகளை மீட்கும் பணி பாரிய பாரந்தூக்கியுடன் துணையுடன் 

இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏ9 வீதி போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், ஏ9 வீதியில் பாலத்தின் இரண்டு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு 

வாகனங்கள் காத்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு