SuperTopAds

நட்சத்திர ஹோட்டலில் 18 நாட்கள் உல்லாசமாக தங்கிய பிக்கு! பணம் செலுத்தாமல் தப்பி ஓட்டம், துரத்திப் பிடித்த பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
நட்சத்திர ஹோட்டலில் 18 நாட்கள் உல்லாசமாக தங்கிய பிக்கு! பணம் செலுத்தாமல் தப்பி ஓட்டம், துரத்திப் பிடித்த பொலிஸார்..

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 18 நாட்கள் உல்லாசமாக தங்கியிருந்த பிக்கு ஒருவர் பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய நிலையில் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பிக்கு மஹியங்கனை பிரதேசத்திலுள்ள விகாரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 31 முதல் 18 நாட்கள் ஹோட்டலில் தங்கியிருந்தார் என்பதுடன் தொடர்புடைய கட்டணம் 527,820 ரூபா ஆகும்.

குறித்த கட்டணத்தைச் செலுத்தாமல் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த அவர், உரிய தொகையை செலுத்துவதாக ஹோட்டலில் தெரிவித்துள்ளார்.

ஆனால் பணத்தை வழங்காததால் ஹோட்டல் நிர்வாகம் பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.