மாகாண மட்டத்தில் அசத்திய புங்குடுதீவு மத்திய கல்லூரி!! -சாதனை படைத்த மாணவிகளுக்கு கௌரவிப்பு-

ஆசிரியர் - Editor II
மாகாண மட்டத்தில் அசத்திய புங்குடுதீவு மத்திய கல்லூரி!! -சாதனை படைத்த மாணவிகளுக்கு கௌரவிப்பு-

யாழ்.புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மாகாண மட்ட மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் 2 ஆவது இடத்தைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகிய வீராங்கனைகளையும்,  செம்பு நடனப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது  இடத்தைப்பெற்று சாதனை படைத்த மாணவிகளையும்  கோலாகலமாக கௌரவிக்கும் நிகழ்வு கடந்த மாதம் 28 ஆம் திகதி புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையில் கல்லூரி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கல்லூரியின் அதிபர் ஆ.விமலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக  தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வு.ஞானசுந்தரனும், சிறப்பு விருந்தினர்களாக பி.சகிலன் ( உதவிக்கல்விப்பணிப்பாளர் - உடற்கல்வி - தீவகம் ) ,  செல்வி வு.துசியா ( ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி தீவகம் ) ஆகியோரும்   கௌரவ விருந்தினர்களாக  வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன்,  புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் தலைவர் சபா.பரமேஸ்வரன், புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழக தலைலர் கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு