SuperTopAds

ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய ரஷ்ய இளைஞன் கைது! விசாரணையில் பொலிஸாருக்கு குழப்பம், சந்தேகநபரிடம் கடவுச்சீட்டே இல்லையாம்...

ஆசிரியர் - Editor I
ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய ரஷ்ய இளைஞன் கைது! விசாரணையில் பொலிஸாருக்கு குழப்பம், சந்தேகநபரிடம் கடவுச்சீட்டே இல்லையாம்...

ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், படுகாயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

குறித்த சம்பவம் கண்டி ஹந்தான பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான 32 வயதான Nadezda Chumk என்ற இளம் பெண் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான யுவதி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். அவரது விசா அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிடும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் கடவுச்சீட்டு இல்லை எனவும், அவர் நாட்டிற்கு வந்த திகதி அல்லது வீசா காலாவதியான திகதி போன்றவற்றைக் கண்டறிய முடியாததால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.