விளையாட்டு பயிற்றுவிப்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 6 சிறுமிகள்! தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்..
விளையாட்டு பயிற்றுவிப்பாளரால் 6 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளது.
குறித்த சம்பவம் அனுராதபுரம் - ஹெக்கிராவ பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுபவர் 14 மற்றும் 16 வயதான 6 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
என ஹெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முறையிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பயிற்றுவிப்பாளரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.