5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!
நாட்டில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச அறிவித்திருக்கின்றது.
இந்த விலைக்குறைப்பு இன்று தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும்,
கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும், வௌர்ளை சீனியின் விலை 22 ரூபாவினாலும், பருப்பின் விலை 17 ரூபாவினாலும்
மற்றும் உள்நாட்டு டின் மீனின் விலை 105 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.