SuperTopAds

பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்த 15 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்த 15 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

பாடசாலை விடுதியில் தங்கிருந்த 15 வயது சிறுவன் கிணற்றில் நீராட சென்றிருந்த நிலையில் கிணற்றில் தவறி விழுந்த உயிரிழந்துள்ளான். 

விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவர், 

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கிணற்றில் நீராடச்சென்ற மாணவனே நேற்று(02) மாலை கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளான்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.