SuperTopAds

தனியார் கல்வி நிலையத்திலிருந்து வீடு திரும்பிய 11ம் வகுப்பு மாணவியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம்!

ஆசிரியர் - Editor I
தனியார் கல்வி நிலையத்திலிருந்து வீடு திரும்பிய 11ம் வகுப்பு மாணவியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம்!

தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் கடத்தப்பட்ட இடத்தில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார். 

மாத்தறை - தெனியாய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மொரவக்க பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். 

இதன்போது மாணவியை வழிமறித்த இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் மீண்டும் கடத்தப்பட்ட இடத்தில் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக கொஸ்மோதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ள பொலிஸார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் கடந்த 31ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.