SuperTopAds

லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அதிபரை நீதிமன்றிற்கு அழைக்காமல் விடுதலை செய்த நீதிபதி! குறுக்கு விசாரணையில் திணறிய லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு..

ஆசிரியர் - Editor I
லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அதிபரை நீதிமன்றிற்கு அழைக்காமல் விடுதலை செய்த நீதிபதி! குறுக்கு விசாரணையில் திணறிய லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு..

மாணவி ஒருவரை பாடசாலையில் சேர்ப்பதற்க லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை அதிபரை நீதிமன்றிற்கு அழைக்காமலே அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். 

அஹங்கம சாருபுத்திரா கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மாணவியை சேர்த்துக் கொள்வதற்காக தந்தையிடம் 20,000/- இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார். 

குறித்த வழக்கு விசாரணையின்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரதீப் ஜெயக்கொடி விடுத்த கோரிக்கைக்கு அமைய வழக்காளிகள் சாட்சியத்தின்போது குறுக்கு விசாரணை செய்ய சட்டத்தரணி அனுமதிக்கப்பட்டார். 

இதன்போது சாட்சியமளிக்கவந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதையடுத்து, குறித்த அதிபரை அழைக்காமலேயே அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 

விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.