பிசு பிசுத்துப்போனது அரசுக்கு எதிரான போராட்டம்! இராணுவம் - பொலிஸார் - அதிரடிப்படை இணைந்து வீதியை மறித்தபின் பலரை காணவில்லையாம்..
அரசுக்கு எதிராக மருதானையில் தொடங்கி கோட்டை புகைரத நிலையம்வரை நடாத்த திட்டமிடப்பட்டிருந்த அரசுக்கு எதிரான போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
மருதானையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போராட்டத்தில்,
புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்திருந்தர். இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் கலைந்து சென்றுள்ளனர்.
ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த கூட்டம் இடைநடுவில் பாதியாக குறைந்துள்ளது. புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்த போது,
பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும், ஆயுதமேந்திய இராணுவத்தினரும்
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.