கொழும்பை சுற்றிக் காட்டுவதற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ஆட்டோ வாடகை வாங்கியவருக்கு நடந்த தரமான சம்பவம்!
நியுசிலாந்து சுற்றுலா பயணியிடம் கொழும்பு நகரை சுற்றிக் காட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை வாங்கிய ஆட்டோ சாரதியான வழிகாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நியூசிலாந்து நாட்டவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நியூசிலாந்துக்காரர் கொழும்பு நகருக்குச் செல்வதற்காக சுற்றுலா வழிகாட்டியுடன் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை வினவ, அதன் சாரதி கொழும்பு நகரைச் சுற்றி வர 20 டொலர் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
ஒரு டொலர் 4,500 ரூபா என்றும், அந்தத் தொகையை ரூபாவாகத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க,
அந்தத் தொகையை நியூசிலாந்துக்காரர் வங்கி அட்டை மூலம் பெற்று அவரிடம் கொடுத்தார்.
இதன்படி சந்தேக நபரான முச்சக்கரவண்டிச் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.