SuperTopAds

5 இலட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க தயாராகும் கனடா!! -வெளியானது மகிழ்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
5 இலட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க தயாராகும் கனடா!! -வெளியானது மகிழ்ச்சி தகவல்-

கனடாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 5 இலட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதற்கான இலக்குகளை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு 4 இலட்சத்து 65 ஆயிரம் புதிய நிரந்த குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது முந்தைய இலக்கை விட 4 வீத அதிகரிப்பாகும். அத்துடன் 2024 ஆம் ஆண்டு 4 இலட்சத்து 85 ஆயிரம் புதிய குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டமிட்டுள்ளதாகவும் இது 7.5 வீத அதிகரிப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

இந்த ஆண்டு குடிவரவு திட்டங்கள் வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிலாளர்களை கண்டறிய உதவும் என சீன் ப்ரேசர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இலக்கை அடைய சொந்த நாடுகளில் வன்முறை மற்றும் போரில் இருந்து தப்பி வருவோருக்கு உதவுவதற்கான கடப்பாடுகளை நிறைவேற்ற கனடா அனுமதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதன்மூலம் கனடா அரசு உதவி பெறும் அகதிகளின் எண்ணிக்கையை 3 இல் ஒரு பங்காக குறைக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை 2023 இல் 23,550 இல் இருந்து 2025 ஆம் ஆண்டிற்குள் 15,250 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடியேற்றத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.

கனடாவில் தற்போது கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மில்லியன் வேலை இல்லாதவர்கள் இருந்ததாகவும் அண்மையில் nவிளயிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், புதிய இலக்குகள் 2023 மற்றும் 2025 இற்கு இடையில் பொருளாதார புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் சுமார் 13 வீதம் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.