SuperTopAds

நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல்! 50 வரையான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
நச்சு வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல்! 50 வரையான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேர் நச்சு வாயுவை சுவாசித்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவின் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடு அல்லது பாடசாலையைச் சுற்றியுள்ள இடங்களிலோ சில எரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன் புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நிலைமை காரணமாக மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.