மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்றிட்டங்களை குழப்பாதீர், அது நாகரீகமான பணி அல்ல..! நீதியமைச்சர் விஜயதாஸ..

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்றிட்டங்களை குழப்பாதீர், அது நாகரீகமான பணி அல்ல..! நீதியமைச்சர் விஜயதாஸ..

பொதுமக்களுக்கு கிடைக்ககூடிய நன்மைகளை குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் செயற்படகூடாது. அது நாகரீகமான பணி அல்ல. என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்ற நிலையில் அங்கு அரசியல்வாதியுடன் 

உள் நுழைந்த சிலர் போராட்டத்தை நடத்தினர். நாம் யாழ்ப்பாணம் வந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையை பெற்று கொடுப்பதற்காகவே வந்தோம் அரசியல் செய்ய வரவில்லை.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் சிலர் செயல்பட்டமை தமது மக்களுக்கான சேவையை தட்டி பறிப்பதாகவே அமைகிறது. 

ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்வதற்கு எவருக்கு உரிமை உள்ளது ஆனால் அதை பிழையான வழியில் சிலர் மக்களை தூண்டி விடுவது ஆரோக்கியமான அரசியல் செயற்பாட்டு அல்ல.

இந்தியாவிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை வந்தவர்களுக்கு  நடமாடும் சேவை நடத்துவதற்காக கொழும்பிலிருந்து அதிகாரிகளை வரவழைத்தோம். 

இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கொழும்புக்கு செல்லாமல் தமது தேவைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொள்வதற்காகவே நடமாடும் சேவையை ஏற்படுத்தினோம்.

இதை புரிந்து கொள்ளாத சிலர் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகளை குழப்புவது தமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு