SuperTopAds

எங்கோ நடத்தவேண்டிய போராட்டத்தை யாழ்.மாவட்டச் செயலத்திற்குள் நடத்திய நா.உ.செ.கஜேந்திரன்! மக்களுக்கு நன்மை பயக்கும் நடமாடும் சேவை குழப்பியடிப்பு..

ஆசிரியர் - Editor I
எங்கோ நடத்தவேண்டிய போராட்டத்தை யாழ்.மாவட்டச் செயலத்திற்குள் நடத்திய நா.உ.செ.கஜேந்திரன்! மக்களுக்கு நன்மை பயக்கும் நடமாடும் சேவை குழப்பியடிப்பு..

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவையினை குழப்பும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையிலான ஒழு ஒன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 

நீதி அமைச்சின் ஒழுங்கமைப்பில் இந்த நடமாடும் சேவை நடத்தப்பட்டிருந்த நிலையில் வடமாகாணத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு மக்கள் சேவை பெறவந்திருந்த நிலையில் அதனை குழப்பும் வகையைில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதனால் மக்கள் பலர் கோபமடைந்திருந்த நிலையில் எதற்காக போராட்டம் செய்கிறார்கள் என விசாரித்தபோது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிராகவே அவர்கள் போராட்டம் நடத்துவது தொியவந்துள்ளது. 

பின்னர் நீங்கள் போராட்டம் நடத்தவேண்டியது இங்கில்லை. என சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திலிருந்து வெளியேறிச் சென்றிருக்கின்றனர்.

இதற்கிடையில் நடமாடும் சேவைக்காக வாழ்ந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிர்ப்புக்காட்ட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பை காட்டட்டும் மக்களுக்கு பயன் தரும் நடமாடும் சேவைகளை குழப்ப வேண்டாம் என தெரிவித்தனர்.

இவ்வாறு குழப்பும் பட்சத்தில் தற்போது நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் தாம் கொழும்பு சென்று சேவையை பெற வேண்டுமானால் சுமார் 50,000 ரூபா வரை செலவழிக்க வேண்டி உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எங்கே போராட்டம் நடத்துவது என தொியாமல் வந்தமை தொியவந்தது.