SuperTopAds

நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு! இருவர் பலி..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு! இருவர் பலி..

நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சென்றிருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  ஹிக்கடுவ - திராணகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக 

பொலிஸார் தெரிவிக்கின்றனர்.