ஜப்பானில் வெளியாகும் தளபதியின் மாஸ்டர் படம்!!

ஆசிரியர் - Editor II
ஜப்பானில் வெளியாகும் தளபதியின் மாஸ்டர் படம்!!

முன்னணி இயக்குனரான வளர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்படவுள்ளது. 

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு