தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்! 2 மாதங்களுக்கு முன் திருமணமானவராம்..
தென்கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற “ஹெலோவின்” கொண்டாட்டத்தில் உயிரிழந்த இலங்கையர் கண்டி உடத்தலவின்ன மடிகே பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காண்பட்டுள்ளார்.
மொஹமட் ஜினாத் (வயது27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். தென் கொரியாவில் 2 வருடங்களாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் தென் கொரியாவுக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின்போது
கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.