SuperTopAds

ஆவரங்கால் இந்து இளைஞன் அணியை வீழ்த்திய தொண்டமனாறு கலையரசி அணி கிண்ணத்தை தனதாக்கியது

ஆசிரியர் - Editor II
ஆவரங்கால் இந்து இளைஞன் அணியை வீழ்த்திய தொண்டமனாறு கலையரசி அணி கிண்ணத்தை தனதாக்கியது

திருமகள் சன சமூக நிலைய 70 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அமர்ர் நல்லையா சதீஸ்குமார் ஞாபகர்த்த 23 வயதுக்குட்பட்ட யாழ்.மாவட்ட ரீதியான கரபந்தாட்ட போட்டியின் தொண்டமனாறு கலையரசி அணி சம்பியனாகியது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியில் தொண்டமனாறு கலையரசி அணி - ஆவரங்கால் இந்து இளைஞன் அணியுடன் மோதியது.

முதல் இரண்டு சுற்றுக்களையும் ஆவரங்கால் இந்து அணி 37:35 - 25:23 என வென்று முன்னிலையில் இருக்க தொணரடமனாறு கலையரசி அணியின் கீர்த்தனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் அடுத்த மூன்று சுற்றுக்களையும் 25:21, 27:25, 15:08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வென்று சம்பியனாகியது. 

ஆட்ட நாயகனாக தொண்டமனாறு கலையரசி அணி வீரன் கீர்த்தனும், தள் அணி கஜான்ன் சிறந்த லிபரோ வீரனாகவும் சிறந்த Attackers  ஆக ஆவரங்கால் இந்து வீரன் செந்தாழனும் தெரிவாகினர் . 

முதலாம் இடம்பெற்ற அணிக்கான 15,000 ரூபா பணப்பரிசும் வெற்றிகரகிண்ணத்தையும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தாயணாலை அதிபர் செ.மகிந்தன் வழங்கி வைத்தார். 

2 ஆம் இடம்பெற்ற அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணத்தையும் அமர்ர் சதீஸ்குமாரின் தந்தை வேலுப்பிள்ளை நல்லலையா வழங்கி வைத்தார்.