SuperTopAds

வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி மற்றும் வாளை காட்ட மிரட்டி கொள்ளை! தப்பிச் செல்லும் வழியில் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்..

ஆசிரியர் - Editor I
வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி மற்றும் வாளை காட்ட மிரட்டி கொள்ளை! தப்பிச் செல்லும் வழியில் கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்..

வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கி மற்றும் வாளை காட்டி மிரட்டி கொள்ளையடித்த 4 பேர் தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குருவிட்ட - கலஹிட்டிய பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குருவிட்ட பொலிஸார், 

கலஹிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான காரொன்றை சோதனையிட்டதில், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், காரை சோதனையிட்டபோது துப்பாக்கி, வாள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு மற்றும் திருடப்பட்ட 8,000 ரூபா பணமும் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 31 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Radio