போதைப் பொருள் வியாபாரியை விருந்துக்கு அழைத்து தாக்கியதுடன், அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் புரிந்த கும்பல்! 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது..

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை தாக்கியதுடன், அவரது மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கேரகலைவை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் கொழும்பு புளுமென்டால் நபர் ஒருவரிடம் 300,000 பெறுமதியான ஹெரோயினை பெற்றுள்ளார்.
எனினும் அவர் உரிய பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர் கேரகல போதைப்பொருள் வர்த்தகரை தனது வீட்டிற்கு விருந்துபசாரத்திற்கு அழைத்துள்ளார்.
கேரகல போதைப்பொருள் வர்த்தகர் தனது மனைவியுடன் அந்த விருந்துபசாரத்திற்கு சென்றவேளை விநியோகஸ்தரின் கும்பலை சேர்ந்தவர்கள் கேரகல போதைப்பொருள் வர்த்தகரையும் அவரது மனைவியையும் கடத்தி
வெவ்வேறு அறைகளில் அடைத்து வைத்ததுடன் அந்த நபரை மோசமாக தாக்கியுள்ளதுடன் அவரது மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் விநியோகஸ்தர் கேரகல போதைப்பொருள் வர்த்தகரின் தாயாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றால் 300,000 ரூபாயை உடனடியாக செலுத்தவேண்டும் என கோரியுள்ளார்.
இதனைதொடர்ந்து தாயார் பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்டு இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வரை கைதுசெய்துள்ளனர்.




