கெய்லின் சாதனையை முறியடித்த கோலி

ஆசிரியர் - Editor II
கெய்லின் சாதனையை முறியடித்த கோலி

ரி-20 உலகக் கி;ண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை பின்தள்ளி இந்திய அணி வீரர் விராட் கோலி 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் துடுப்பாட்டாத்தில் பிராகாசித்த விராட் கோலி, 44 பந்துகளில் 62 ஓட்டங்களைக் பெற்றார். 

இதன் மூலம் ரி-20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (965 ஓட்டங்கள்) பின்னுக்குத் தள்ளி விராட் கோலி (989 ஓட்டங்கள்) இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரான விராட் கோலி ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு