கதறி கதறி அழுத ஜனனி!! காரணம் என்ன தெரியுமா?
பிக் பாஸ் 6 ஆம் சீசனுக்கு போட்டியாளராக பங்கு கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான ஜனனி தற்போது 2 ஆம் வாரத்திலேயே கேப்டன் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
'எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன். சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை. எனக்கு கஷ்டமா இருக்கு' என ஜனனி கேமரா முன்பு கூறி அழுதுள்ளார்.