SuperTopAds

யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு மற்றும் போயா நாட்களிலும் திறக்கும் சமுர்த்தி வங்கி..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு மற்றும் போயா நாட்களிலும் திறக்கும் சமுர்த்தி வங்கி..!

சமுர்த்தி வங்கிகளை சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்களிலும் திறப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அவற்றுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். என சமுர்த்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திலகசிறி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒரு கோடி பேர் வரை சமுர்த்தி கிராம சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற நிலையில் 29 ஆயிரம் கிராம மட்ட சங்கங்கள் செயற்படுகின்றன. சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முகமாக 

பல்வேறு வேலை திட்டங்களை ஏற்படுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் கொழும்பில் முதற்கட்டமாக நான்கு சமுர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்திய நிலையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 

மூன்று வங்கிகளை டிஜிட்டல் தளத்தில் செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கினோம். யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகள் பொதுமக்களுக்கான இலகு கடன் வழங்கலில் காத்திரமான பங்கை வகிக்கின்ற நிலையில் சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்களில் வங்கிகளை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

ஆகவே ஏனைய வாங்கி நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில் சமுர்த்தி வாங்கி பொதுமக்களுக்கான இலகுவான வழிகாட்டலுடன் செயற்பட்டு வருகிற நிலையில் பயனை மக்கள் அனுபவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Radio