SuperTopAds

பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டில் 15 வயதான பாடசாலை மாணவன் படுகாயம்! பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி சூட்டில் 15 வயதான பாடசாலை மாணவன் படுகாயம்! பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம்..

பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருடைய துப்பாக்கி தவறுதலாக இயங்கிய நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றமான நிலையேற்பட்டது. 

குறித்த சம்பவம் திஹாகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்தபோது, ​​

அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்றபோது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் 15 வயதான பாடசாலை மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து, திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கிராம மக்கள் திரண்டதால் 

அங்கு கடும் பதற்றநிலை ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் 

பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Radio