அவுஸ்திரேலிய முன்னணி வீரருக்கு கொரோனா!! -விக்கெட் காப்பாளர் பயிற்சியில் மெக்ஸ்வெல்-

ஆசிரியர் - Editor II
அவுஸ்திரேலிய முன்னணி வீரருக்கு கொரோனா!! -விக்கெட் காப்பாளர் பயிற்சியில் மெக்ஸ்வெல்-

அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்காப்பாளர் மெதிவ் வேட்டிற்கு கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அந்த அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் அடம் ஷாம்பா கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்திருந்தார். இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசிப்போட்டியில் இவர் விளையாடவில்லை.

இருப்பினும் மெதிவ் வேட் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வெல் விக்கெட் காப்பு பயிற்சிகளை மேற்கொண்டுவரும் காணொளிகளும் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ஐ.சி.சி  வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் வீரர்கள் போட்டிகளில் விளையாட முடியும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

அதன் அடிப்படையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற சுபர் 12 போட்டியில் அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டொக்ரல் கொரோனா வைரஸ் தொற்றுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு