பினுர பெர்னாண்டோவுக்கு பதில் அசித பெர்னாண்டோ

ஆசிரியர் - Editor II
பினுர பெர்னாண்டோவுக்கு பதில் அசித பெர்னாண்டோ

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரி-20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியின் போது, முதல் 5 பந்துகளை வீசிய நிலையில் தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக பினுர பெர்னாண்டோ களத்திலிருந்து வெளியேறினார்.

பின் இவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உபாதையின் தீவிரத்தன்மையின் காரணமாக ரி-20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்திலிருந்து இவர் நீக்கப்படுவதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

பினுர பெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் நியூசிலாந்து அணியை நானை சனிக்கிழமை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு