SuperTopAds

முச்சக்கரவண்டியால் மாணவனை மோதியதோடு காயமடைந்த மாணவனை வைத்தியசாலை கொண்டு செல்வதாக கூறி நடுவழியில் இறக்கிவிட்டவர் கைது!

ஆசிரியர் - Editor I
முச்சக்கரவண்டியால் மாணவனை மோதியதோடு காயமடைந்த மாணவனை வைத்தியசாலை கொண்டு செல்வதாக கூறி நடுவழியில் இறக்கிவிட்டவர் கைது!

பாடசாலை மாணவன் ஒருவனை மோதி காயப்படுத்திவிட்டு அவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாதி வழியில் இறக்கிவிட்டு தப்பி ஓடிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதற்கமைய, குறித்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கினிகத்தேன பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியை நேற்று (26) கைது செய்து, ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எட்டியாந்தோட்டை - மீப்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Radio