SuperTopAds

மீண்டும் பிரித்தானிய உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளி பெண்!

ஆசிரியர் - Admin
மீண்டும் பிரித்தானிய உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளி பெண்!

சட்டத்தை மீறியதற்காக ராஜினாமா செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு , ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக மீண்டும் சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு நாட்களுக்கு முன்பு சுயெல்லாவின் ராஜினாமா, லிஸ் ட்ரஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, சுயெல்லா பதவி விலகிய 24 மணிநேரத்திற்குப் பிறகு லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்தார்.

பிரேவர்மேனின் ராஜினாமா கடிதத்தில், 'தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நம்பகமான பாராளுமன்ற சக ஊழியருக்கு அதிகாரப்பூர்வ ஆவணத்தை' அனுப்பியதை ஒப்புக்கொண்டார் - அதை அவர் ' தொழில்நுட்ப விதிமீறல்' என்று குறிப்பிட்டார்.

அவர் தனது தவறை உணர்ந்தவுடன் உடனடியாக இது குறித்து அறிக்கை அளித்ததாக கூறிய சுயெல்லா, இந்த தவறுக்கு தான் பதவி விலகுவது சரியான செயலாக இருக்கும் என்பதாகியும் உணர்ந்ததாக கூறினார்.

ஆனால், இப்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றத்தை அடுத்து, சுயெல்லா பிரேவர்மேனுக்கு தனது இரண்டாவது முறையாக உள்துறை செயலாளர் பொறுப்பை ரிஷி வழங்கியுள்ளார். இதன்மூலம், அவரது தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தில் அவரது (சுயெல்லா) பதவிக்காலம் 43 நாட்கள் நீடித்தது. 1834-ல் வெலிங்டன் டியூக்கிற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் உள்துறைச் செயலாளராக பணியாற்றிய நபர் ஆனார்.