நியூசிலாந்தை எதிர் கொள்ளும் இலங்கை அணியில் மாற்றமா? -சில்வர்வூட் தகவல்-

ஆசிரியர் - Editor II
நியூசிலாந்தை எதிர் கொள்ளும் இலங்கை அணியில் மாற்றமா? -சில்வர்வூட் தகவல்-

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்தப்போட்டியில் மாற்றங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் தோல்வியடைந்தமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இலங்கை அணி போட்டித்தன்மையான குழுவில் இடம்பெற்றுள்ளபோதும் அணியின் இலக்கு போட்டிகளில் வெற்றிபெறுவதே தவிர்த்து, எதிரணிகளுக்கு சவால் கொடுப்பது அல்ல.

ரி-20 உலகக்கிண்ணத்தில் எந்தவொரு உபாதையாக இருந்தாலும் அது கடினம். வீரர்கள் எப்படி இருக்கின்றனர் என கணக்கிடவேண்டும். உபாதை தொடர்பில் இப்போது பதில் கூறுவது கடினம். உடற்கூறு நிபுணர் அறிக்கையொன்றை தருவார். அதன் பின்னர் நாம் திட்டங்களை வகுக்கமுடியும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு