இலங்கைக்கு அதிரடி காட்டிய ஸ்டாய்னிஸ்!! -யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார்-

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு அதிரடி காட்டிய ஸ்டாய்னிஸ்!! -யுவராஜ் சிங் சாதனையை முறியடித்தார்-

ரி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2 ஆவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை அவுஸ்ரேலியா அணி வீரர் ஸ்டாய்னிஸ் பதிவு செய்துள்ளார். 

17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த அவுஸ்ரேலியா  துடுப்பாட்ட வீரர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

நேற்று அவுஸ்ரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா நாணயசுழல்ச்சியில் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்ரேலியா ஆடியது.

ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே அவுஸ்ரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த அவுஸ்ரேலியா துடுப்பாட்ட வீரர்; என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு