இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து!! -5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி-

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து!! -5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி-

ரி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததது.

மெல்போர்னில் நடந்த குறித்த போட்டியில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின மழையால் ஆட்டம் ஆரம்பமாவதற்கு பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பின் 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி ஆரம்பமானது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

இங்கிலாந்து அணித்தலைவர் ஜாஸ்பட்லர் நாணயசுழல்ச்சினில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து துடுப்பெடுத்தாடியது. முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 2 ஆவது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.

மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் ஆரம்பமானது. அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 158 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடியது. இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். 

மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு