யாழ்.பல்கலைகழகத்திற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கையின் முதல் பெண்மணி, பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்க..

இலங்கையின முதல் பெண்மணியும், களனி பல்கலைகழக ஆங்கில துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28ம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.




