வாள்கள், கத்திகளுடன் வீடொன்றில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல், பொலிஸ் அதிரடிப்படை சுற்றிவளைப்பில் கைது!

வீடொன்றில் வாள்கள், கத்திகளுடன் தங்கியருந்த 6 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் வெல்லப்பட்டிய - கொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, வாள்கள், கத்திகள் மற்றும் மன்னா கத்திகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுக்காக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் 20 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்ட தம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.




