பிரித்தானியா புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

ஆசிரியர் - Editor II
பிரித்தானியா புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ரிஷி சுனக்கிற்கு மிகவும் அன்பான வாழ்த்துக்கள், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பிரித்தானியா வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ள லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், எங்கள் அடுத்த பிரதமராகவும் நியமிக்கப்பட்டதற்காக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று டிரஸ் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு