பிரிட்டனின் பிரதமராகின்றார் ரிசி சுனாக்
கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் வெற்றிபெற்றுள்ள ரிசி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியில் ரிசி சுனாக்கை விட குறைந்தளவு ஆதரவை பெற்றிருந்த பெனிமோர்டோன்ட் போட்டியிலிருந்து இறுதி நேரத்தில் விலகியுள்ளதை தொடர்ந்து ரிசி சுனாக் கட்சியின் தலைவராகவும் புதிய பிரதமராகவும் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
44 நாட்கள் மாத்திரமே பதவியில் நீடித்த லிஸ் டிரசிற்கு பதில் புதிய பிரதமராக பதவியேற்குமாறு சார்ல்ஸ் மன்னர் ரிசிசுனாக்கை பதவியேற்குமாறு கேட்டுக்கொள்வார். முன்னாள் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் போட்டியிலிருந்து விலகியிருந்தார்
இந்த தீhமானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ள பெனிமோர்டோன்ட் இது எங்கள் கட்சியின் பன்முகத்தன்மையையும் திறமையையும் வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.