SuperTopAds

பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய ஒருவரை சுட்டுக் கொன்ற பொலிஸார், மற்றொருவர் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய ஒருவரை சுட்டுக் கொன்ற பொலிஸார், மற்றொருவர் படுகாயம்..!

பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கொள்ளையனை பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் நீர்கொழும்பு - ஆண்டியம்பலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்ற பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டாா சைக்கிளில் தப்பி சென்றனர். 

இதன்போது அவர்களை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில் பொலிஸார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். மற்றைய நபரும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Radio