“வீதி ஒழுங்குகளை பேணி பயணிப்போம்” யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான நடமாடும் சேவை..
வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் வடமாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடத்தும் "வீதி ஒழுங்குகளை பேணிப் பாதுகாப்பாக பயணிப்போம்" எனின் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இன்று ஆரம்பமானது.
கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபை வளாகத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் ஆரம்பித்த நடமாடும் சேவை மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமையும் (23) இடம்பெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிசாந்த அனிருத்த வீரசிங்க , மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் , வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன்,
யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நடமாடும் சேவையின் ஊடாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கையும் இலகுவாக ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என வட மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.