ஜெயம் ரவிக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
ஜெயம் ரவிக்கு கொரோனா!!

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். 

என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு