பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் கணவனை குத்திக் கொன்ற நபர் கத்தியுடன் பொலிஸாரிடம் சரண்..!
பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறிய நிலையில் பெண்ணின் கணவனை குத்திக் கொலை செய்த நபர் ஆயுதத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (21) காலை கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதிலியாகுடுவ பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காயமடைந்த நபர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 51 வயதுடைய ஹுனுப்பிட்டிய, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இந்நிலையில் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் குறித்த ஆயுதத்துடன் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன்போது உயிரிழந்தவரின் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக
அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது கைது செய்யப்பட்டவர் 33 வயதுடையவரவாவர்.
சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.