SuperTopAds

சிவில் சமூகத்துடன் கலந்துரையாடினார் டொனால்ட் லூ!

ஆசிரியர் - Admin
சிவில் சமூகத்துடன் கலந்துரையாடினார் டொனால்ட் லூ!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும் வலுவான சிவில் சமூகம் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.