மட்டக்களப்பில் நிமலராஜனின் 22 ஆவது நினைவேந்தல்!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பில் நிமலராஜனின் 22 ஆவது நினைவேந்தல்!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் மலர் மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நினைவுச்சுடரை ஏற்றி, மலர் தூபி ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு