மீண்டும் லீக்கான தளபதியின் வாரிசு பட காட்சி!! -அதிர்ச்சியில் படக்குழு-

ஆசிரியர் - Editor II
மீண்டும் லீக்கான தளபதியின் வாரிசு பட காட்சி!! -அதிர்ச்சியில் படக்குழு-

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் சில காட்சிகள் வெளியாகியுள்ளமை படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு வெளியிட திட்டமிருந்ததாகவும் தற்போது இந்த பாடல் மற்றும் இதன் காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும் 'வாரிசு' படத்தின் பல காட்சிகள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு