குழந்தை பெற்ற ஆசை!! -மனம் திறந்த தமன்னா-
தமிழில் திரையுலகில் தமன்னா 17 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின.
இதற்கு விளக்கம் அளித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில்:- எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே உள்ளார்கள்.
எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் உள்ளேன் என்றார்.