யாழ்.இந்துக்கல்லுாரி மைதானத்தடியிலிருந்து யாழ்.நகருக்கு வருவதற்கு 2 ஆயிரம் கேட்டு மிரட்டிய ஆட்டோ சாரதி, யாழ்.நகர ஆட்டோ சாரதிகளால் நன்கு கவனிக்கப்பட்டார்...

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்துக்கல்லுாரி மைதானத்தடியிலிருந்து யாழ்.நகருக்கு வருவதற்கு 2 ஆயிரம் கேட்டு மிரட்டிய ஆட்டோ சாரதி, யாழ்.நகர ஆட்டோ சாரதிகளால் நன்கு கவனிக்கப்பட்டார்...

யாழ்.நகரில் தரிப்பிட அனுமதியற்ற ஆட்டோ சாரதி ஒருவர் யாழ்.இந்துக்கல்லுாரி பகுதியிலிருந்து யாழ்.நகருக்கு வருவதற்கு இளம்பெண் ஒருவரை மிரட்டி சுமார் 1500 ரூபாய் பணம் பெற்ற நிலையில், 

சம்பவம் தொடர்பாக அறிந்த யாழ்.நகர ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்த ஆட்டோ ஓட்டுனரை மடக்கிப் பிடித்து நன்கு கவனித்த பின்னர் ஆட்டோவுக்குரிய கூலி பணத்தை கொடுத்துவிட்டு மிகுதி பணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.இந்துக்கல்லுாரி மைத்தானத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் வீதியால் வந்த ஆட்டோவை மறித்து யாழ்.நகருக்கு செல்வதற்கு எவ்வளவு பணம் என கேட்டுள்ளார். 

ஆனாலும் தொகையை சொல்லாமல் பார்க்கலாம் வாருங்கள் என கூறி பெண்ணை அழைத்துச் சென்ற ஆட்டோ சாரதி யாழ்.நகரில் குறித்த பெண்ணிடம் 2 ஆயிரம் ரூபாய் தருமாறுகேட்டு அச்சுறுத்தியுள்ளார். 

எனினும் அந்த பெண் தன்னிடம் 1500 ரூபாய் மட்டுமே உள்ளதாக கூறிய நிலையில் அதனை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அழுதபடி யாழ்.நகரில் சேவையல் ஈடுபடும் தரிப்பிட அனுமதியுள்ள 

ஆட்டோ சாரதிகளை சந்தித்து தான் ஆட்டோவில் பயணித்த துாரத்திற்கு எவ்வளவு பணம் என கேட்டுள்ளார். இதனையடுத்து சம்பவத்தை யூகித்துக் கொண்ட ஆட்டோ சாரதிகள் துரிதமாக செயற்பட்டு பெண்ணை மிரட்டி ஆட்டோ சாரதியை மடக்கியுள்ளனர்.

எனினும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் நன்கு கவனிக்கப்பட்டதால் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு நியாயமாக தனக்கு கிடைக்கவேண்டிய பணத்தை எடுத்துவிட்டு மிகுதி பணத்தை பெண்ணிடம் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு