SuperTopAds

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் துண்டிப்பாம்! பல மில்லியன் ரூபான் மின் கட்டணம் நிலுவையாம்..

ஆசிரியர் - Editor I
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் துண்டிப்பாம்! பல மில்லியன் ரூபான் மின் கட்டணம் நிலுவையாம்..

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் மின்சாரசபையினால் துண்டிக்கப்பட்டிருப்பதாக மின்சாரசபை அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று நேற்று (17) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், 

அதனை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தி, ஒளிபரப்பு சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Radio