SuperTopAds

வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த பெண்ணை கொலை செய்து கொள்ளை..!

தனிமையில் வாழ்ந்த பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி - பேராதனை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. பேராதெனிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவதை கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்துள்ளனர். 

பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் தலையில் கூரிய ஆயுதங்களால் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 65 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவர்.மேலும் கொள்ளையர்களால் அங்கிருந்து அலுமாரி உள்ளிட்டவற்றில் உள்ள தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்று இருக்கலாம். 

என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் மற்றொருவர் கம்பளை பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கண்டியில் குறுகிய காலப்பகுதியில் வீட்டில் தனித்து வந்த பெண் தாக்குதலுக்கு உட்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Radio