பூனகரியின் மகுடம் கிண்ணம்!! -பள்ளிமுனை வசமானது-
2022 ஆம் ஆண்டுக்கான பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண அணிகளை உள்ளடக்கிய அமரர் இராசநாயகம் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி போட்டி கடந்த சனிக்கிழமை மாலை முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதி போட்டியில் மன்னார் புனித லூசியா விளையாட்டுக்கழகம் மற்றும் வலைப்பாடு மெசியா விளையாட்டுக்கழகம் மோதிக்கொண்டன. இதில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மன்னார் புனித லூசியா விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
இப் போட்டியில் மன்னார் புனித லூசியா விளையாட்டுக்கழகம் சார்பில் சிறந்த வீரராக றெபேக்சனும், சிறந்த பின்கள வீரராக டியுலனும், வலைப்பாடு மெசியா விளையாட்டுக்கழகம் சார்பில் சிறந்த கோல் காப்பாளராக றொசாறியோவும், தொடராட்ட நாயகனாக அஜந்தன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.
அமரர் இராசநாயகம் அறக்கட்டளையின் முழுமையான நிதி அனுசரணையுடன் பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நாடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.