SuperTopAds

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பதற்றம்! 15 பேர்வரை கைது...

ஆசிரியர் - Editor I
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பதற்றம்! 15 பேர்வரை கைது...

நாவலப்பிட்டி பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற பொழுது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐக்கிய மக்கள் சக்தியினரால் குறித்த எதிர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இதனையடுத்து சசங்க சம்பத் சஞ்சீவ  உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை ,நாவலப்பிட்டிய நகருக்கு இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.