SuperTopAds

வீடு வீடாக சென்று அதிகவட்டி ஆசைகாட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

ஆசிரியர் - Editor I
வீடு வீடாக சென்று அதிகவட்டி ஆசைகாட்டி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

வீடு வீடாக சென்று அதிகவட்டி கொடுப்பதாக கூறி சுமார் 70 கோடிவரை மோசடி செய்தாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

கஹதுட்டுவ - பாலகம என்ற இடத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொியவந்துள்ளது. 

வீடொன்றுக்குள் சிலர் வந்து குழப்பமான முறையில் நடந்து கொள்வதாக கஹதுட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்

பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபருக்கு பணம் வழங்கியுள்ளதாக கஹதுட்டுவ பொலிஸாருக்கு ஏற்கனவே பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

28 வயதான இந்த நபர் இன்று (15) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Radio